சாதித்து காட்டிய குசால் பெரேராவிற்கு ஜாம்பவானிடம் இருந்து வந்த வாழ்த்து!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்த குசால் பெரேராவிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

டர்பனில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

ஆனால் அணியின் மட்டையாளர்கள் யாரும் களத்தில் நிலைத்து நிற்காததால், 69.4 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 226 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி கொண்டிருந்தது.

மிடில் ஆர்டரில் இறங்கி திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேரா, 153 ரன்கள் குவித்து தத்தளித்துக்கொண்டிருந்த அணியை எதிர்பார்க்காத அளவிற்கு கரை சேர்த்து சாதனை படைத்தார்.

இந்த வெற்றி குறித்து திறமையாக விளையாடிய குசால் பெரேராவிற்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககார, ஜெயவர்த்தனே, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அதேசமயம் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோரும் குசால் பெரேராவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர மட்டையாளருமான் பிரையன் லாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சிறந்த இன்னிங்ஸ் இளம் குசால் பெரேரா! என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers