இறந்த வீரர்களுக்காக இதனை செய்யுங்கள்! விராட் கோஹ்லியின் ரசிகர்கள் வேண்டுகோள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை இந்திய அணி தவிர்க்க வேண்டும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் வலுபெற்று வருகிறது.

இந்திய ராணுவ வீரர்கள் மீதான கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிரதமருமான இம்ரானின் கானின் புகைப்படம் இந்திய கிரிக்கெட் சங்கத் தலைமையகத்தில் மறைக்கப்பட்டு, அதன் மீது போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், அவரது புகைப்படத்தை முழுவதுமாக அங்கிருந்து நீக்கவும் இந்திய கிரிக்கெட் சங்கம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சில ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கேப்டன் விராட் கோஹ்லி, பி.சி.சி.ஐ, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரை டேக் செய்து தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.

ஒரு ட்விட்டில், ‘வரும் உலகக் கிண்ண போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்பதே அனைத்து ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. நாம் அவர்களுடன் விளையாடாமல் இருந்தால், இரண்டு புள்ளிகள் குறைந்து அடுத்த நிலைக்குச் செல்ல முடியாது.

புள்ளிகள் குறைந்தாலும் பரவாயில்லை. இதை நீங்கள் இந்திய ராணுவத்தினருக்காக செய்ய வேண்டும்’ என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதைப் புறக்கணிக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers