இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நேர்ந்த சோகம்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதிரடி வீரரும், சிறந்த பீல்டிங் செய்யக்கூடியவருமான சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இது தொடர்பாக யூடியூப்பில் பல்வேறு வீடியோக்களும் உருவாக்கப்பட்டு செய்திகள் வெளியாயின.

இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சுரேஷ் ரெய்ன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான, போலியான செய்தி வெளியாகி வருகிறது. நான் கார் விபத்தில் இறந்துவிட்டது போன்ற வீடியோக்கள் வலம் வருகின்றன.

இந்த வீடியோக்களால் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தயவு செய்து இதுபோன்ற செய்திகள் தவிர்த்துவிடுங்கள். இறைவனின் கருணையால் நான் நலமான இருக்கிறேன்.

என்னைப் பற்றி தவறாக செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் குறித்து முறைப்படி புகார் செய்யப்பட்டு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கல்லம், பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் ஆகியோர் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers