இலங்கை அணியில் திறமையான வீரர்கள் உருவாகவில்லை: முரளிதரன் கவலை

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக் கோப்பை போட்டியில் மூன்று முறை இறுதிச் சுற்றுக்கு சென்ற இலங்கை அணி தற்போது மோசமான நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது என்று முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த 3, 4 ஆண்டுகளில் திறமையான வீரர்களை உருவாக்கவில்லை. திறமையான வீரர்கள் கிடைத்தாலும், அவர்கள் எப்படி விளையாடவேண்டும் என்று அறிந்திருக்கவில்லை.

நான் ஓய்வுபெற்ற பின்னர் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்பில் இல்லை.

நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் பணம் பெரிய விஷயமாக இல்லை. விக்கெட், ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினோம். ஆனால் இப்போதைய நிலைமை வேறாக உள்ளது. பணத் துக்கு மதிப்பு கொடுத்தால் கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிடும் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers