விமான விபத்தில் பலியான கால்பந்து வீரருக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி! அணி நிர்வாகத்தின் உருக்கமான பதிவு

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

விமான விபத்தில் பலியான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் சாலாவின் உடலுக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து வீரரான எமிலியானோ சாலா விமான விபத்தில் பலியான நிலையில், அவரது உடல் 15 நாட்களுக்கு மேலான தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சாலாவின் உடல் தெற்கு பிரித்தானியாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலா விளையாடி வந்த கார்டிஃப் சிட்டி கால்பந்து அணி தனது இரங்கலை இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில் கூறுகையில், ‘சாலாவின் குடும்பத்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் எங்களுடைய உணர்வுப்பூர்வமான ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். வீரர் சாலாவும், விமானி டேவிட்டும் என்றுமே எங்கள் நினைவில் இருப்பார்கள்’ என தெரிவித்துள்ளது.

AFP

மேலும் சாலாவின் ரசிகர்கள் அவரது படத்திற்கு மலர்கொத்துகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து பொலிசார் கூறுகையில், வானிலை சாதகமாக இல்லாத காரணத்தினால் தான் விமானம் விபத்துக்குள்ளானது.

ஆனாலும் மேற்கொண்டு விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். வேல்ஸின் கார்டிஃப் சிட்டி அணி சாலாவை 138 கோடிக்கு விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Reuters

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers