தயவு செய்து நான் போகலாமா? இரட்டை குழந்தைகள் பிறந்த செய்தி கேட்டு ஓடிய கால்பந்து வீரர்! நெகிழ்ச்சியில் மூழ்கிய மைதானம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சவுத் வேல்ஸில் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில், நியூபோர்ட் கவுண்டி வீரர் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான விடயம் அறிந்தும், அனுமதி கேட்டு மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

FA Cup கால்பந்து போட்டிகள் சவுத் வேல்ஸில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் நியூபோர்ட் கவுண்டி மற்றும் மிடில்ஸ்பிராக் அணிகள் மோதின. இதில் நியூபோர்ட் கவுண்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் போது நியூபோர்ட் அணியின் கோல்கீப்பர் ஜோ டேவின் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த விடயம் தெரிய வந்தது. ஆனால், ஜோ டே தனது செல்போனை அணைத்து வைத்திருந்ததால் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடயமே அவருக்கு தெரியாது.

இந்நிலையில், போட்டி முடிந்ததும் அவர் தந்தையான விடயத்தை அணியின் உரிமையாளர் ஜோ டேவிடம் கூறினார். அதனைக் கேட்டு உற்சாகமடைந்த ஜோ டே, அவரிடம் அனுமதி கேட்டுவிட்டு வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து நியூபோர்ட் கவுண்டி அணியின் உரிமையாளர் மைக்கேல் பிஃளைன் கூறுகையில், ‘அவர் தான் Professional வீரர். தனது செல்போனை அவர் அணைத்து வைத்திருந்தார். போட்டி முடிந்து நாங்கள் வெற்றி பெற்றோம்.

அப்போது அவர் காஃபர் மிக்க நன்றி, தயவு செய்து நான் போகலாமா? என கேட்டார். அதற்கு நான், தாராளமாக நீங்கள் செல்லலாம். உங்களுக்கு Lift வேண்டுமா? என்று கேட்டேன். அவ்வளவு தான்’ என தெரிவித்துள்ளார்.

நியூபோர்ட் கவுண்டி அணியினர் போட்டி முடிந்ததும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், ஜோ டே அதனை தவிர்த்து விட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை காண வேகமாக ஓடியது மைதானத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers