இந்திய அணி வீரர்கள் பாண்ட்யா-ராகுல் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் மீது ராஜஸ்தான் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஹிந்தி பட இயக்குநர் கரண் ஜோஹரின் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் இருவரும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் காரணமாக அவர்கள் இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதன் பின்னர், அவர்களுக்கு அணிக்கான வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் பாண்டியா-ராகுல் மீதான தடை நீக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஹர்த்திக் பாண்ட்யா இந்திய அணியிலும், கே.எல்.ராகுல் இந்திய ஏ அணியிலும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு மகளிர் அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹர்த்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், கரண் ஜோஹர் ஆகியோர் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers