அதிர்ச்சியில் ரசிகர்கள்: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விராட்கோஹ்லி நீக்கம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியானது அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது நியூசிலாந்தில் விளையாடி வருகிறது.

இதில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் விராட் கோலி 45(59) ரன்கள் எடுத்தார். இருஅணிகளுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 26 ஆம் தேதி மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், கடைசி இரண்டு போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக ரோகித்சர்மா கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers