பயமாக இருக்கிறது... விமானம் விபத்தில் சிக்கலாம்: மாயமான பிரபல வீரரின் கடைசி வார்த்தைகள்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

விமான பயணத்தினிடையே மாயமான அர்ஜெண்டினா நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவின் கடைசி குறுந்தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் மாயமாவதற்கு முன்னர் நான்றஸ் அணியின் சக வீரர்களுக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பியதே அந்த தகவல்.

விமானத்தின் கட்டுப்பாடு இழந்துள்ளதாகவும், அது விபத்தில் சிக்க இருப்பதாகவும் சாலா தமது குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜெண்டினாவின் முக்கிய நாளேடு ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், தாம் பயணப்படும் அந்த குட்டி விமானம் தொடர்பில் அவருக்கு ஏற்கெனவே சந்தேகம் இருந்தது எனவும் தெரியவந்துள்ளது.

சாலா அனுப்பிய 3 குறுந்தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் தகவலில், தாம் இறக்க இருப்பதாகவும், விமானம் கட்டுப்பாடு இழந்துள்ளது எனவும் சாலா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தாம் கார்டிஃப் நோக்கி பயணமாவதாகவும், இந்த விமானம் எப்போது வேண்டுமானாலும் விபத்தில் சிக்கலாம் என குறிப்பிட்ட சாலா,

நண்பர்களே நாளை பகல் தாம் புதிய அணியில் இணைந்து பயிற்சியை துவங்க இருப்பதாகவும் தமது இரண்டாவது குறுந்தகவலில் தெரிவித்துள்ளார்.

என்ன செய்வதன்றே தெரியவில்லை. இனிமேல் என்னைப் பற்றிய தகவல் ஏதும் வெளியாக வாய்ப்பில்லை. காப்பாற்ற எவரையேனும் அவர்கள் அனுப்புவார்களா எனவும் தெரியவில்லை.

இனிமேல் அனுப்பினாலும் அதனால் எந்த பயனும் இல்லை என்றே கருதுகிறேன் என தமது மூன்றாவது குறுந்தகவலில் தெரிவித்துள்ளார்.

நாண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான சாலா தமது புதிய அணியினருடன் இணைவதற்காக தமது சக வீரருடன் குட்டி விமானத்தில் பிரான்ஸில் இருந்து வேல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் சனல் தீவுகளுக்கு மேலே பறந்துகொண்டிருக்கும் போது விமானம் மாயமானதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers