விமானத்துடன் காணாமல் போன வீரர்: மீண்டும் வருவார் என காத்திருக்கும் ரசிகர்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலா விமானத்துடன் மாயமாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்டஸ் அணியின் வீரரான எமிலியானோ சாலா இதுவரை நாந்த் கழகத்துக்கு கால்பந்து விளையாடி வந்தார். வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் சிட்டி கால்பந்து அணி சமீபத்தில் இவரை விலைக்கு வாங்கியது.

இதனையடுத்து இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம் மூலம் சாலா, பிரான்ஸில் இருந்து வேல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்,

சனல் தீவுகளுக்கு மேலே பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விமானம் மாயமாகியுள்ளது, விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

>இது குறித்து பேசியுள்ள நாந்த் கழகத்தின் தலைவர், சாலா ஒரு போராளி. அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கையுள்ளது. இது முடியவில்லை. அவர் எங்கேயோ இருக்கிறார். ஒரு நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers