பிரபல சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரை உள்ளே அனுமதிக்காத காவலாளி! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சுவிட்சர்லாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அடையாள அட்டை இல்லாததால் வெளியிலேயே காக்க வைக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க உலகின் பல நாடுகளில் இருந்தும் டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

உலக அளவில் முக்கியமான வீரர்கள் பங்கேற்கும் போட்டி என்பதால் இந்த தொடருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது.

போட்டியில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக, போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு கொடுக்கப்படும் அடையாள அட்டைகளை சோதனை செய்த பிறகு தான், அவர்கள் மைதானத்திற்குள்ளோ அல்லது விளையாட்டு தொடர்பான அறைகளுக்குள்ளோ அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், சுவிஸின் பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் அடையாள அட்டை இல்லாமல் மைதானத்திற்கு வந்துள்ளார். அப்போது வாயிற்பகுதியில் நின்றிருந்த காவலாளி, அடையாள அட்டை இல்லாமல் வந்த பெடரரிடம் அட்டை குறித்து கேட்டபோது, தனது பயிற்சியாளரிடம் இருப்பதாக கூறிவிட்டு ஓரமாக காத்து நிற்கிறார்.

அவருக்கு பின்னர் வரும் பலரும் பெடரரை கடந்து செல்கின்றனர். பின் தாமதமாக வரும் பயிற்சியாளர் பெடரரின் அடையாள அட்டையை காட்டிய பிறகு இருவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் வாயிற்காவலர் தனது கடமையை சரியாக செய்ததையும், அதற்கு அமைதியாக பெடரர் ஒத்துழைப்பு கொடுத்ததையும் பாராட்டியுள்ளனர்.

இதற்கு முன்பும் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா அடையாள அட்டை இல்லை என்று நிறுத்தப்பட்டு, பின் அதனை காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers