அழாதீங்க.. நீங்க பிரமாதமா ஆடினீங்க: தோல்வியுற்ற வீராங்கனைக்கு ஆறுதல் கூறிய செரீனா வில்லியம்ஸ்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தன்னிடம் தோல்வியுற்று அழுத இளம் வீராங்கனைக்கு ஆறுதல் கூறிய விடயம் வைரலாக பரவி வருகிறது.

அவுஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் டென்னிஸ் ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், உக்ரைன் நாட்டு வீராங்கனை டயானா யஸ்ட்ரெம்ஸ்காவுடன்(18) மோதினார்.

ஆக்ரோஷமாக விளையாடிய செரீனா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். ஆனால், டயானாவினால் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் செரீனா கைகொடுக்க வரும்போது டயானா அழுதுவிட்டார்.

அப்போது செரீனா, ‘உனக்கு இன்னும் வயது உள்ளது. நீ இளம் வீராங்கனை, நீ பிரமாதமாக ஆடினாய், அழாதே. எதிர்காலத்தில் சிறந்த வீராங்கனையாக வருவாய்’ என்று டயானாவின் தோள் மீது கையைப் போட்டு ஆறுதல் கூறினார். அதன் பிறகு இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் அவுஸ்திரேலிய ஊடகங்களில் செய்தியாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து செரீனா கூறுகையில், ‘அவர் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

அவர் இங்கு வெறுமனே ஆட மட்டும் வரவில்லை. வெற்றி பெற வேண்டும் என்று வந்திருக்கிறார். அதுதான் என் இதயத்தை உடைத்து விட்டது. அவரிடம் திறமை உள்ளது, அவரிடம் இந்த அணுகுமுறை எனக்கு பிடித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் டயானா இதுகுறித்து கூறுகையில், இந்த வார்த்தைகளை ஒரு லெஜண்டிடமிருந்து கேட்டபோது என் கவலைகளை மறந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers