சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு: உலகளவில் நம்பர் 1 இடத்தில் இலங்கை வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சு கணக்கை இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமீந்தா வாஸ் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டியில் சமீந்தா வாஸ் 8 ஓவர்கள் வீசி வெறும் 19 ஓட்டங்களை மட்டும் விட்டு கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதில் 3 மெய்டின் ஓவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்ரிடி 2வது இடத்தில் உள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இதில் அப்ரிடி 9 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களை விட்டு கொடுத்து 7 விக்கெட்களை எடுத்தார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் அவுஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத் உள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் திகதி நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா விளையாடியது.

இப்போட்டியில், மெக்ராத் 7 ஓவர்கள் வீசி 15 ஓட்டங்களை விட்டு கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers