உங்களுக்கு நேரமிருந்தால்.... ரிஷப் பண்டை வீட்டிற்கு அழைத்த அவுஸ்திரேலிய கேப்டன் மனைவி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு நேரமிருந்தால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வருமாறு அவுஸ்திரேலிய கேப்டன் மனைவி இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்து டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

போட்டியின் போது “போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ, நானும் என் மனைவியும் படத்துக்கு போயிட்டு வருகிறோம்.” என அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், ரிஷப் பண்டை கலாய்த்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டிம் பெய்ன் ஒரு தற்காலிக கேப்டன் எனக்கூறி ரிஷப் பண்ட் கிண்டலடித்தார்.

இது பெரும் சர்ச்சையானதை அடுத்து ரிஷப் பண்டிற்கு அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கைக்கு மேற்கொண்டது. இதற்கிடையில் அவுஸ்திரேலிய பிரதமர் உடனான சந்திப்பின் போது, ரிஷப் பண்ட் மற்றும் தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து டிம் பெய்ன் மனைவி போனி பெய்ன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது இணையம் முழுவதும் வைரலாகி, வெறும் 500 பாலோவர்களை கொண்டிருந்த போனி பெய்னிற்கு சுமார் 36000 பாலோவர்களை கொண்டு வந்து சேர்த்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகளை பார்த்து கொள்ள வீட்டிற்கு வருமாறு போனி பெய்ன், ரிஷப் பண்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers