துப்பாக்கியை காட்டி மிரட்டிய திருடன்: தூக்கி அடிச்சு ரத்தக்காயமாக்கிய மல்யுத்த வீராங்கனை

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

பிரேசில் நாட்டில் மல்யுத்த வீராங்கனையிடம் திருட முயன்ற திருடன் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போலியனா வியன்னா என்ற மல்யுத்த வீராங்கனை களத்தில் ஆக்ரோஷமாக மோதக்கூடியவர். அயர்ன் லேடி என்று அழைக்கப்படும் இவர், இது வரை மோதிய 12 ஆட்டங்களில் 10 -ல் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் காருக்காக காத்திருந்தபோது அங்கு வந்த திருடன் முதலில் டைம் என்ன என்று கேட்டுள்ளான். வீராங்கனை பதில் அளித்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து செல்லாமல் வீராங்கனையை சுற்றி வந்த திருடன், தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும், உன்னிடம் உள்ள செல்போனை கொடு என்று கேட்டு மிரட்டியுள்ளார்.

உடனே, திருடனை அடிச்சு தூக்கி கீழே தள்ளிவிட்டு பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளார் வீராங்கனை.

காவலர்கள் அவரை சோதனையிட்டதில், அவரிடம் இருந்தது அட்டைத் துப்பாக்கி எனத் தெரியவந்தது. மேலும், அவரைக் காவல் நிலையம் அழைத்துச்செல்லும் முன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...