உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் வருகிறது

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் குஜராத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.

63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த மைதானத்தின் கட்டு மான பணி மதிப்பீடாக ரூ.700 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகின்மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியதாக அமையும்.

இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் கார்களும் ,10 ஆயிரம் இருசக்கரவாகனங்களும் நிறுத்த முடியும்.மேலும் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளமும் அமைக்கப்பட உள்ளது.

இந்த மைதானம் பயன்பாட்டிற்கு வரும் போது இந்தியாவை பெருமைப்படுத்தும் வகையிலும், நாட்டின் பெருமைக்குரிய சின்னமாகவும் மாறும் என குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers