13 சிக்சர்கள்! 57 பந்துகளில் அதிரடி சதமடித்த இலங்கை வீரர்.. இறுதி வரை நடந்த போராட்டம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் திசாரா பெரேரா 140 ஓட்டங்கள் குவித்தும் அந்த அணி தோல்வியடைந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது.

இதன் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 319 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 320 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர் குணதிலகா 71 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவரை அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் எடுத்து இலங்கை தத்தளித்தது.

பின்னர் வந்த திசரா பெரேரே விஸ்வரூபம் எடுத்தார். சிக்சர் மழை பொழிந்த அவர் 57 பந்துகளில் சதமடித்தார்.

இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அவர் 74 பந்துகளில் 8 பவுண்டரி 13 சிக்சருடன் 140 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

இதையடுத்து இலங்கை அணி 46.2 ஓவர்களில் 298 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் வென்றது. பெரேரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகள் மோது கடைசி போட்டி 8-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers