ரிஷப் பண்ட் ரசிகர்களால் குஷியில் இருக்கும் அவுஸ்திரேலிய கேப்டன் மனைவி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் இளம்வீரர் ரிஷப் பண்ட், தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் ஒரே நாளில் அவுஸ்திரேலிய கேப்டனின் மனைவி இன்ஸ்டாகிராமில் பிரபலமாகியுள்ளார்.

இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரியில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனை தொடர்ந்து நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ன் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

இதனை துரத்தி பிடிக்கும் முனைப்பில் விளையாடி வரும் அவுஸ்திரலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைதானத்தில் நடந்த காரசாரமான கருத்து மோதல்களால், டிம் பெய்ன் மற்றும் ரிஷப் பண்ட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்திருந்தனர்.

அதற்கேற்றாற் போல அவுஸ்திரேலிய பிரதமர் உடனான சந்திப்பின் போது, அணியின் கேப்டன் டிம் பெய்ன் உடைய மனைவி ‘போனி பெய்ன்’, ரிஷப் பண்ட் உடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் இணையம் முழுவதும் வைரலானதை அடுத்து, 5000 பாலோவர்களை மட்டுமே கொண்டிருந்த போனி பெய்ன் இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது சுமார் 36000 பாலோவர்களை தாண்டி சென்றுவிட்டது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருக்கும் போனி பெய்ன், “இதற்கு காரணம் ரிஷப் பண்ட் இன் ரசிகர்கள் மட்டுமே” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers