அவுஸ்திரேலியாவில் காதல் மனைவியுடன் புத்தாண்டு கொண்டாடும் விராட்கோஹ்லி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி தன்னுடைய காதல் மனைவி அனுஷ்கா சர்மாவுடன், சிட்னியில் புத்தாண்டு கொண்டாடும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

4 வது டெஸ்ட் போட்டியானது வரும் 3ம் தேதியன்று சிட்னியில் துவங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னியில் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி, 2019ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தை தன்னுடைய மனைவியுடன் கொண்டாடும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘இந்தியா மற்றும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். சிறப்பான ஆண்டாக அமைய கடவுள் ஆசிர்வதிப்பார்’’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்