உயிருக்கு போராடும் இலங்கை கிரிக்கெட் வீரர்: வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை யூத் கிரிக்கெட் வீரரும், இலங்கையின் உள்ளூர் அணியான Ragama CC கிளப்பின் வீரருமான அக்‌ஷு பெர்ணாண்டோ ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இலங்கையில் உள்ள Mount Lavinia கடற்கரை பகுதியில் பெர்ணாண்டோ சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது south-bound ரயில் அவர் மீது மோதியுள்ளது.

இதையடுத்து ஆபத்தான நிலையில் பெர்ணாண்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்