11 வருடங்களுக்கு பிறகு பிரித்தானிய ராணியிடம் விருது வாங்கப்போகும் கிரிக்கெட் வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பிரித்தானியாவின் புத்தாண்டு விருதுகள் பட்டியலில் இடப்பெற்றுள்ள 'நைட் ஹூட்' பட்டத்தினை இங்கிலாந்து அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் அலஸ்டெய்ர் குக் பெற உள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான அலஸ்டெய்ர் குக், 2012 முதல் 2017 வரை டெஸ்ட் அணியை வழிநடத்தினார்.

இங்கிலாந்து அணிக்காக இரண்டு ஆஷஸ் கோப்பைகளை வென்று பெருமை சேர்த்ததுடன், அணி சார்பில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய அணிக்கெதிராக நடந்த டெஸ்ட் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறும் தன்னுடைய முடிவினை அறிவித்தார்

பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு, கலை, அறிவியல் துறைகளில் சாதிக்கும் நட்சத்திரங்களுக்கு புத்தாண்டிற்கான கவுரவப் பட்டியலில் வழங்கப்படும் 'நைட் ஹூட்' விருதினை ராணி வழங்கி கவுரவிப்பார்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விழாவில், 11 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டெய்ர் குக் பெயர் தற்போது இடம்பெற்றுள்ளது.

முன்னதாக 2007ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் இயான் போத்தம் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...