அவுஸ்திரேலிய கேப்டனை மைதானத்தில் வைத்தே அவமானப்படுத்திய இளம் இந்திய வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

டெஸ்ட் போட்டியின் இடையே கலாய்த்த அவுஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷ்ப் பண்ட் பழிவாங்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இடையே நடைபெற்ற கருது மோதல்களின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும்போது அவுஸ்திரேலியா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோரை வம்பிழுத்து பேசியுள்ளார்.

ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும்போது, “ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து உன்ன தூக்கிட்டு தோனிய கொண்டு வந்துட்டாங்க.

பரவாயில்லை உன்ன வேணும்னா பிக்பாஸ் (உள்ளூர் போட்டி) போட்டியில் சேர்த்து விடவா?

போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ, நானும் என் மனைவியும் படத்துக்கு போயிட்டு வருகிறோம்.” என அடுத்தடுத்து கலாய்த்துக் கொண்டிருந்தார்.

இதற்கு பழிவாங்கும் விதமாக டிம் பெய்ன் பேட்டிங் செய்யும்போது பேசிய ரிஷப் பண்ட், “நமக்கென்று ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறார். ஜட்டு நீ தற்காலிக கேப்டன் என்ற பெயரை இதுவரைக்கும் கேட்டுருக்கியா? உனக்கு அவரை அவுட்டாக்க எதுவும் செய்யம் வேண்டாம்" என பேசியுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...