தனது குழந்தைகளுக்கு சாண்டா உடை உடுத்தி அழகு பார்த்த ரொனால்டோ! வெளியிட்ட புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிறிஸ்துமஸை முன்னிட்டு தனது குழந்தைகளுக்கு சாண்டா உடை அணிவித்த குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான ரொனால்டோ தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார்.

தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகாஸ், குழந்தைகள் அலனா, ஈவா மரியா, கிறிஸ்டியானோ ஜூனியர் மற்றும் மட்டியோ ஆகியோருடன் ரொனால்டோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் ரொனால்டோவும், ஜார்ஜினா மற்றும் கிறிஸ்டியானோ ஜூனியர் மூவரும் தலையில் சாண்டா தொப்பி அணிந்துள்ளனர். மற்ற மூன்று குழந்தைகள் சாண்டா உடையில் உள்ளனர். அவர்களின் பின்புறத்தில் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்துடன் ‘Feliz Natal! Merry Christmas!' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...