ஓரங்கட்டப்பட்ட டோனிக்கு மீண்டும் இந்திய அணியில் இடம்: ரசிகர்கள் உற்சாகம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

டி20க்கான இந்திய அணியில் மகேந்திர சிங் டோனி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் டோனி மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதோடு, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் டோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

டோனி மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து ரசிகர்கள் டோனியின் பெயரை டுவிட்டரில் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers