கல்லூரித் தோழியை கரம்பிடித்த ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்ஸன், தனது கல்லூரித் தோழியான சாருலதாவை திருமணம் செய்துகொண்டார்.

கேரள ரஞ்சி அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரரான சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார்.

சஞ்சு சாம்சன் தன்னுடன் கல்லூரியில் படித்த சாருலதா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இன்று திருவனந்தபுரம் கோவளத்தில் சாம்சன்-சாருலதா திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். சாம்சன் கிறித்துவ மதத்தையும், சாருலதா இந்து மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இவர்களின் திருமணம் நடந்தது.

இந்நிலையில் திருமணம் குறித்து சாம்சன் கூறுகையில், ‘இருவீட்டார் தரப்பில் இருந்து 30 பேர் மட்டும் அழைக்கப்பட்டு, மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இரு குடும்பத்தினரின் ஆசியுடன் திருமணம் நடந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

கடந்த ஐ.பி.எல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சஞ்சு சாம்சன் சுமார் 8 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers