ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை தில்ருவன் படைத்துள்ளார்.

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையும் தில்ருவன் வசமே உள்ளது.

அவர் 11 போட்டிகளிலேயே 50 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் 25 போட்டிகளில் 100 விக்கெட்களை தில்ருவன் வீழ்த்தினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 27 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது.

அதை தில்ருவன் முறியடித்துள்ளார்.

விரைவாக 150 விக்கெட்களை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியவர் என்ற சாதனை முரளிதரன் வசம் உள்ளது.

அவர் 36 போட்டிகளில் 150 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தற்போது 34 போட்டிகளில் 147 விக்கெட்களை தில்ருவன் வீழ்த்தியுள்ள நிலையில் முரளிதரன் சாதனையை மீண்டும் முறியடிக்க அவருக்கு பிரகாசமாக வாய்ப்பு உள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers