புஜாரா அடுத்த டிராவிட்டா? கொந்தளிக்கும் ரசிகர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றிக்கு காரணமாக அமைந்த புஜாராவை, முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடுவதற்கு அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில், 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் புஜாரா முதல் இன்னிங்சில் 123 ஓட்டங்களும், 2வது இன்னிங்சில் 71 ஓட்டங்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதனால் ஊடகங்கள் புஜாராவை முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிட்டு கொண்டாடி வருகின்றன. பி.சி.சி.ஐ-யும் தனது ட்விட்டர் பக்கத்தில், 2003ஆம் ஆண்டு அடிலெய்டு டெஸ்டில் டிராவிட் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்றும்,

2018ஆம் ஆண்டில் அதே மைதானத்தில் புஜாரா ஆட்டநாயகன் விருது பெற்றார் என்றும் அவர்களது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. 2003ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் டிராவிட் முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்களும், 2வது இன்னிங்சில் 72 ஓட்டங்களும் விளாசினார்.

ஆனால், டிராவிட்-புஜாரா ஒப்பீட்டை டிராவிட்டின் ரசிகர்கள் விரும்பவில்லை. சிலர் டிராவிட்டை புலி என்றும், புஜாராவை பூனைக்குட்டி என்றும் கிண்டல் செய்துள்ளனர்.

மேலும், சிலர் எந்த காரணமாக இருந்தாலும் டிராவிட்டுடன் ஒப்பிட வேண்டாம் என்றும், டிராவிட் இந்தியாவின் தடுப்புச் சுவர், புஜாரா அதில் கவசம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers