பிசிசிஐ ஆயுட்கால தடை மிகவும் கடுமையானது: உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு

Report Print Jayapradha in ஏனைய விளையாட்டுக்கள்

2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டார், இதனை தொடர்ந்து பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வாழ்நாள் தடை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த்தை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆயுட்கால தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணையின் போது ஸ்ரீசாந்த்தின் வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் வாதாடினார்.

அப்பொழுது அவர் அசாருதீனுக்கும் பிசிசிஐ வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடை நீதிமன்றத்தால் விலக்கப்பட்டது.

மேலும் தற்போது இவருக்கு 35 வயதாகிறது. ஆயுட்கால தடையை நீக்காவிட்டால் அவரால் விளையாட முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை மிகவும் கடுமையானது என்று கூறினார்.

மேலும் அவருக்கு வாழ்நாள் தடையை பிசிசிஐ விலக்கிக் கொள்ளும்போது ஸ்ரீசாந்துக்கும் வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என்றார்.

அந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றத்தின் முடிவு வரும் வரை காத்திருக்குமாறு கூறி உச்ச நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி மூன்றாம் வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers