பலவீனமான அவுஸ்திரேலிய அணி.. இந்தியாவிற்கு பொன்னான வாய்ப்பு: சச்சின் டெண்டுல்கர் கருத்து

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 6ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அவுஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும். 350க்கும் அதிகமான ஓட்டங்களைக் குவிக்க வேண்டும்.

அதேபோல் பந்துவீச்சாளர்களும் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து, ஓட்டங்கள் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே அவுஸ்திரேலியா அணி இருந்தது. தற்போது அவர்கள் இல்லாததால் அணி பலவீனமாகி உள்ளது. எனவே இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers