இதுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது: தமிழக வீரர் அஸ்வின்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அவுஸ்திரேலியாவுடனான முந்தைய தொடர்கள் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, வரும் 6ஆம் திகதி அடிலெய்டில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 3ஆம் நாள் பயிற்சி ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

‘அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாம் பந்துவீச்சிலும் கூட நெருக்கமான கூட்டணி அமைத்து செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். பந்துவீச்சில் நல்ல கூட்டணியை உருவாக்குவதுடன், விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்.

எல்லா நேரங்களிலும் எதிரணியின் விக்கெட்டை எளிதில் வீழ்த்தி விட முடியாது. இருப்பினும் பந்துவீச்சில் நாம் தொடர்ந்து முன்னிலையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எனவே பந்துவீச்சாளர்கள் தொடர் முழுவதும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் நான் முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்துவது முக்கியமானதாகும். கடந்த முறை இங்கு நடந்த தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டேன். அது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, தொடரை வெல்வது என்பது எளிதான காரியம் அல்ல. என்னை பொறுத்த வரையில், இப்போதைக்கு அவுஸ்திரேலியா தான் வெற்றி வாய்ப்புள்ள அணியாக தெரிகிறது’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers