சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம்: விராட்கோஹ்லி ஆக்ரோஷம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று 20 ஓவர் போட்டிகள், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் 20 ஓவர் போட்டியின் முதல் ஆட்டம் பிரிஸ்பன் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், என்னை பொறுத்தவரை ஆக்ரோஷத்தினால் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்தையும் இந்திய அணியின் வெற்றிக்காக போராட வேண்டும்.

ஆக்ரோஷம் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவேறு விதமான கருத்து இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு, எந்த விலையிலும் அணியை வெற்றிபெற செய்ய வேண்டும்.

அதற்காக பேட்டிங், பீல்டிங் அல்லது நான் வெளியில் இருந்தாலோ கைகளை தட்டி 120 சதவீத திறமையை வெளிப்படுத்துவேன்.

எந்த ஒரு வார்த்தை மோதலையும் இந்திய அணி துவக்கியதில்லை. எதிரணியினர் ஆக்ரோஷத்தை காட்டினால், களத்தில் நாங்களும் காட்டுவோம். எந்த நிலையிலும் நாங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், ஸ்மித், வார்னர் இல்லாதது எந்த ஒரு அணிக்கும் பெரும் இழப்பு தான். ஆனால் இவர்கள் இல்லாவிட்டாலும் அவுஸ்திரேலிய அணி எப்போது சொந்த மண்ணில் வலிமையானது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்