கோஹ்லி மைதானத்தில் அமைதியாக இருந்தால் தான் ஆச்சரியம்: கூறியது யார் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி மைதானத்தில் அமைதியாக இருந்தால் தான் ஆச்சரியம் என அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வருகிற 21ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டூ பிளிசிஸ் இதுதொடர்பாக கருத்து கூறும்போது, கோஹ்லியிடம் மோதல் போக்கை கடைபிடிக்காமல் அமைதியுடன் செயல்பட்டால் சாதிக்கலாம் என்று அவுஸ்திரேலிய வீரர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

இதற்கு விராட் கோஹ்லி தான் மோதல் போக்கை கடைபிடிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தற்போது கோஹ்லியின் அமைதி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

AFP

அவர் கூறுகையில், ‘ மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டேன் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு இருந்தால்தான் ஆச்சரியம். அவர் சிறந்த போட்டியாளராக திகழ்கிறார்.

நாங்கள் போட்டி மனப்பான்மையோடு ஆடுவோம். கோஹ்லியை வித்தியாசமாக கருத மாட்டோம். இதற்கு முன்பு நேரிட்டது போல் எதுவுமே நடக்காது.

எங்கள் டெஸ்ட் அணி ஒன்று கூடியதும், எப்படி விளையாடுவது, தனி நபர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதற்காகவே இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்