படாத பாடுபட்ட டோனி: பல வருடங்களுக்கு பின் உண்மையை உடைத்த லக்‌ஷ்மண்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
368Shares

டோனி இந்திய அணியின் கேப்டனாகியதும், மைதானத்திலிருந்து ஹோட்டல் அறை வரை பேருந்தை ஒட்டி சென்றதாக முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் லக்‌ஷ்மண் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான விவிஎஸ்., லட்சுமண் கடந்த 2012-ம் ஆண்டு திடீரென ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதற்கு காரணம் அப்போதைய கேப்டனாக இருந்த டோனி தான் என ஊடகங்கள் பலவற்றிலும் செய்திகள் வெளியாகின.

அதற்கேற்றாற் போல லக்‌ஷ்மண் தனது ஓய்வு முடிவை தோனியிடம் தெரிவிக்காதது, பின் நடந்த பார்ட்டிக்கு தோனியை அழைக்காதது என பல விஷயங்கள் நடந்தது.

இந்த நிலையில் லக்‌ஷ்மன் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகமான '281 and Beyond'-ல் அதை பற்றிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அதில், நான் அணியிலிருந்து ஓய்வை அறிவித்ததும், ஒரு பார்ட்டியில் டோனியை சந்தித்தேன்.

அப்போது டோனி முதலில் என்னை பார்த்து சிரித்தார். பின் லக்‌ஷ்மண் பாய், இந்த சர்ச்சையில் உங்களைவிட நான் படாத பாடு பட்டுவிட்டேன். இதை எல்லாம், மனதுக்கு எடுத்து செல்லாதீர்கள், சில நேரத்தில் நல்ல விஷயத்தில் உண்மை வெளிவராமல் போய்விடும் எனக்கூறியதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல டோனி கேப்டனாக பதவியேற்ற அன்று, நாக்பூர் மைதானத்திலிருந்து ஹோட்டல் அறை வரை பேருந்தை அவர் தான் ஒட்டி சென்றார். தோனி மிகவும் பொறுமையான மனிதர். நான் அவரைப் போன்ற ஒருவரையும் சந்தித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்