கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு டோனி நிதியுதவி கொடுக்கப்போகிறாரா? வெளியான தகவல்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
98Shares

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு டோனி தன்னுடைய ஐபிஎல் வருவாயில் 30 சதவீதம் வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயலால் தற்போது வரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த குடும்பங்களுக்குட் தமிழக முதல்வர் பழனிச்சாமி 10 லட்சம் ரூபாய் நிவாரணயுதவி வழங்கப்பட்டும் என அறிவித்தார்.

இந்த புயலின் காரணமாக 1 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கஜாவின் இந்த கோர தாக்குதலில் நாகை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். நாகை மாவட்டத்தில் இருக்கும் வேதாரண்யம் ஒரு குட்டித் தீவு போன்று காட்சியளிக்கிறது.

இது எல்லாம் சரியாக எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து தெரியவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர் டோனி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தனது ஐபிஎல் வருவாயில் 30 சதவீதத்தை கொடுக்கவுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்