கோஹ்லி சிரிப்பது என் காதில் விழுகிறது: ரோஹித் ஷர்மாவின் கிண்டல் பேச்சு

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 3 கேட்சுகள் பிடித்தது குறித்து ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 224 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 137 பந்துகளில் 20 பவுண்டரிகள், 4 சிக்சருடன் 162 ஓட்டங்கள் குவித்தார்.

அத்துடன் அவர் பீல்டிங் செய்தபோது ஸ்லிப்பில் 3 கேட்சுகளைப் பிடித்தார். இந்நிலையில், ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தது குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில்,

‘ஸ்லிப்பில் கொஞ்ச நாட்களாக கேட்சுக்களைப் பிடித்து வருகிறேன். இதனை நான் கூறும்போதே விராட் கோஹ்லி சிரிப்பது என் காதில் விழுகிறது. ஆனால், ஸ்லிப்பில் கேட்சுக்களை நான் கொஞ்ச நாட்களாக பிடித்து வருகிறேன்.

கேட்சுக்களை எடுப்பது முக்கியம். கேட்சுக்கள் எப்போதும் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால், ஸ்லிப்பில் குல்தீப் யாதவ்வின் கூக்ளிக்களை கணிப்பது மிகக் கடினம். ஆனால், அவர் கூக்ளிக்கு எப்படி தயாராவது என்பதைக் கற்றுக் கொண்டேன்.

எங்களிடமிருந்து துல்லியமான ஆட்டம் வெளிப்பட்டது. 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்தாலும், நானும் ராயுடுவும் பெரிய கூட்டணி அமைத்தோம். இப்போதெல்லாம் பெரிய கூட்டணிகள் சாத்தியமாகின்றன. இது நல்ல விடயம்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers