17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் சாலை ஓரம் ஐஸ் விற்கும் அவலம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம் குவித்த தினேஷ் குமார் தனது கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமார். குத்துச்சண்டை வீரரான தினேஷ் குமார் நாட்டிற்காக பல போட்டிகளில் விளையாடி பதக்கம் வென்றுள்ளார்.

குறுகிய காலமே அவா் விளையாடி இருந்தாலும் 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என சாதனை படைத்துள்ளார்.

மேலும் கடந்த 2010ம் ஆண்டு இந்திய அரசின் சிறந்த வீரருக்கான அா்ஜூனா விருதையும் இவா் வென்றுள்ளார்.

சாலை விபத்து காரணமாக தினேஷ் குமார் மேற்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

தினேஷின் மருத்துவ செலவு மற்றும் அவரை வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறச் செய்வதற்காக அவரது தந்தை பெற்ற கடன் காரணமாக தினேஷ் குமாரின் குடும்பம் மிகவும் கடனில் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் குடும்ப கஷ்டத்தை சமாளிக்க தினேஷ் ஐஸ் விற்பனை செய்து வருகிறார். இது தொடா்பாக பேசுகையில், “கடன்களை அடைப்பதற்காக ஐஸ் விற்று வருகிறேன். திடீரென நடந்த விபத்தால் என்னால் தொடா்ந்து விளையாட முடியவில்லை.

எனக்கு நிலையான வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். என்னால், இளம் வீரா்களுக்கு பயிற்சி அளித்து அவா்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும்” என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers