டோனியை அணியிலிருந்து நீக்கியது சரியான முடிவு தான்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ச்சை பேச்சு

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை அணியில் இருந்து நீக்கியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை நீக்கி இந்திய தேர்வுக் குழு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது.

மேலும் இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விரிவாக ஆலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய ஆதங்கங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர், டோனியை இந்திய அணியில் இருந்து நீக்கியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என கூறியுள்ளார்.

மேலும், 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பையை மனதில் வைத்துக்கொண்டு தோனிக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு அதிகமான போட்டிகளில் வாய்ப்புகள் கொடுத்து அவரை மெருகேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அகர்கரின் இத்தகைய கருத்து டோனி ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers