மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை கைப்பற்றும் சவுதி இளவரசர்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

பிரித்தானிய கால்பந்து அணிகளில் அதிக வெற்றிகளை குவித்துள்ள மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை 4 பில்லியன் பவுண்டுகள் தொகைக்கு சவுதி இளவரசர் சல்மான் கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களுடன் அடுத்த சில வாரங்களில் ஐக்கிய அமீரகத்தின் துபாயில் வைத்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கிளேசர் குடும்பம் கடந்த 2005 ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை விலைக்கு வாங்கினர்.

தற்போது 4 பில்லியன் பவுண்டுகள் தொகைக்கு சவுதி இளவரசர் சல்மான் இந்த அணியை கைப்பற்றினால் இதன் மூலம் கிளேசர் குடும்பத்தினர் சுமார் 2.2 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு மகத்தான லாபம் ஈட்ட உள்ளனர்.

இதனிடையே பத்திரிகையாளர் கொலை தொடர்பில் சிக்கலில் மாட்டியுள்ள சவுதி இளவரசர் சல்மான் அதனின்று வெளியேறிய பின்னரே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கிளேசர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அது சவுதி இளவரசரிடம் செல்லுபடியாகுமா என்பது சந்தேகமே என்கின்றனர், இளவரசருக்கு நெருக்கமானவர்கள்.

தற்போதைய நிலவரப்படி மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் சந்தை மதிப்பு 3.2 பில்லியன் பவுண்டுகள் என போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ள நிலையில்,

அதனுடன் 800 மில்லியன் பவுண்டுகளை அதிகமாக செலுத்தி அணியை கைப்பற்ற சவுதி இளவரசர் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.

சவுதியின் பட்டத்து இளவரசர் சல்மானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 850 பில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்