பும்ராவை போல பந்து வீசி அசத்தும் பாகிஸ்தான் சிறுவன்: வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை போல பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சிறுவன் பந்து வீசும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு ஆரம்பமானத்திலிருந்தே தன்னுடைய வித்யாசமான பந்து வீச்சால் ரசிகர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தற்போது இந்திய அணியில் தனெக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

அவரது பந்து வீச்சு இந்திய ரசிகர்களை தாண்டி பாகிஸ்தான் ரசிகர்கள் வரை ரசிக்க வைத்துள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 5 வயது சிறுவன் பந்து வீசும் வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

அதில், அந்த சிறுவன் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் எனவும், ஆசிய கிண்ணம் தொடரில் பும்ராவின் பந்து வீச்சை பார்த்ததிலிருந்து அவரைப்போலவே சிறுவன் பந்து வீச முயற்சிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்