அந்த தருணத்தில் நான் அழுதே விட்டேன்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
128Shares

வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இவர் 2007 மற்றும் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். இவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பி.சி.சி.ஐ-ஆல் வாழ்நாள்தடை விதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சச்சின் குறித்து நெகிழ்ந்துள்ளார். 2011 -ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை நாங்கள் கைப்பற்றிய பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு நேர்காணல்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்தன.

ஒரு நிகழ்ச்சியில், கேள்விகளைக் கேட்பவர், அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்து பேசி வந்தார். அந்தப்பட்டியலில் எனது பெயர் வரவில்லை. அவர் முடிக்கும் தருவாயில் குறுக்கிட்ட சச்சின், `ஸ்ரீசாந்த் சிறப்பாக விளையாடினார்.

இந்தக் கோப்பையைக் கைப்பற்றியதில் அவரின் பங்கும் முக்கியமானது என்று தெரிவித்தார். அந்த தருணத்தில் நான் அழுதே விட்டேன் என நெகிழ்ந்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்