தேசியத்தில் வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த குத்துச்சண்டை வீரர்கள்: எப்படி தெரியுமா?

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
54Shares

பொலநறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தேசிய குத்துச் சண்டை போட்டியில் வடமாகாண குத்துச்சண்டை அணி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், நான்கு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

வெள்ளிப் பதக்கங்களை கிளிநொச்சியினைச் சேர்ந்த விற்றாலிஸ் நிக்லஸ் 81Kg மற்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் வீராங்கனையான பிரசாந்தி 69Kg ஆகியோர் பெற்றுள்ளனர்.

வெண்கல பதக்கங்களை வவுனியாவைச் சேர்ந்த துரைமணி சதுர்சன் 91kg சத்தியமூர்த்தி கேசவன் 91Kg ஜெகநாதன் தர்சிகன் 81Kg ஆகியோருடன் பெண் வீராங்கனையான விஜயரத்ன 69Kg ஆகிய நால்வரும் பெற்றுள்ளனர்.

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் சார்பில் பங்குபற்றும் குத்துச் சண்டை அணிக்கான பயிற்றுனராக சுரங்க அவர்களும் போட்டிக்கான அணியினை நெறிப்படுத்தும் அணிப்பொறுப்பதிகாரியாக பயிற்றுனர் பசுபதி ஆனந்தராஜ் அவர்களும் கடமையாற்றி வருகின்றார்கள்.

வட மாகாண குத்துச் சண்டை அணி கடந்த வருடம் நடைபெற்ற தேசிய குத்துச் சண்டை போட்டிகளில் ஒரு வெள்ளிப் பதக்கத்தினையும் ஆறு வெண்கலப் பதக்கங்களினையும் பெற்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதக்கம் பெற்ற வீரர்கள்

  1. விற்றாலிஸ் நிக்லஸ்
  2. பிரசாந்தி
  3. துரைமணி சதுர்சன்
  4. சத்தியமூர்த்தி கேசவன்
  5. ஜெகநாதன் தர்சிகன்
  6. விஜயரத்ன

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்