பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய கபடி பயிற்சியாளர் தற்கொலை

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
193Shares

13 வயது சிறுமி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இந்திய விளையாட்டு கழக கபடி பயிற்சியாளர் ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் இந்திய விளையாட்டு கழகத்தின் கபடி பயிற்சியாளராக இருந்து வரும் மூத்த பயிற்சியாளர் ருத்ரப்பா ஹோசாமணி (59), கடந்த அக்டோபர் 9-ம் தேதியன்று பெண்கள் உடை மாற்றும் அறையில் நுழைந்து 13 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்தது.

அந்த சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் வடக்கு பெங்களூருவிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இந்திய விளையாட்டு கழக அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தவிட்டனர். அதேசமயம், போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸாரும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று தேவநகரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்த ருத்ரப்பா, திங்கட்கிழமை மதியம் வரை வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ருத்ரப்பா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார் ஞாயிற்றுக்கிழமையே தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்