நான் ஓய்வு பெறும்போது என் கண்களில் கண்ணீர் வராது! நெகிழ்ச்சியுடன் கூறிய இந்திய வீரர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
244Shares

தான் மகிழ்ச்சியுடனே விடைபெறுவேன் என்றும், ஓய்வு பெறும்போது தன் கண்களில் கண்ணீர் வராது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் கவுதம் கம்பீர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் கவுதம் கம்பீர், 15 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட்களில் 4,154 ஓட்டங்களும், 147 ஒருநாள் போட்டிகளில் 5,238 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

இதில் டெஸ்டில் 9 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 11 சதங்களும் அடங்கும். எனினும், கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், தனது ஓய்வு குறித்து கவுதம் கம்பீர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இப்போதுவரை நான் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் ஓட்டங்கள் சேர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன் விளையாடுவதே என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து செய்வேன். என்னைப் பொறுத்தவரை ஓட்டங்கள் சேர்ப்பது, வெற்றி பெறுவது, ஓய்வறையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் என்னை மேலும் உற்சாகப்படுத்தும். இந்நேரம் வரை எனக்குள் கிரிக்கெட் உணர்வு இருந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் மகிழ்ச்சியான சூழலில் ஓய்வறையில் இருக்க விரும்புகிறேன். அதற்காக தொடர்ந்து, கிரிக்கெட் விளையாடுவேன். என்னைப் பொறுத்தவரை, நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நாளில் கூட, நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்த மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்