ரோஹித் ஷர்மாவின் காலில் விழுந்து பின் திடீரென முத்தம் கொடுத்த ரசிகர்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
143Shares

ரசிகர் ஒருவர் மைதானத்திலேயே இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவுக்கு முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா, தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார். இத்தொடரில் ரோஹித் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி போட்டியில் மும்பை-பீகார் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பீகார் அணி 69 ஓட்டங்களில் சுருண்டது.

பின்னர் எளிய இலக்குடன் மும்பை களமிறங்கியது. தொடக்க வீரராக ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது தீவிர ரசிகர் ஒருவர், தடுப்பு வேலியை தாண்டி மைதானத்திற்குள் ஓடிவந்தார்.

வேக வேகமாக வந்த அவர் ரோஹித் ஷர்மாவின் காலில் விழுந்து கும்பிட்டார். பின்னர் ரோஹித்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத ரோஹித் ஷர்மா பொறுமையாக அவரிடம் இருந்து விலகினார்.

அதன் பின்னர், குறித்த ரசிகர் மிகவும் உற்சாகமாக துள்ளிக்குதித்து கேலரிக்கு சென்றுவிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்கள் எடுக்க, மும்பை அணி 12.3 ஓவர்களில் இலக்கினை எட்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்