மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நிர்வாணமாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

பிரபல டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் I Touch Myself Project 2018 என்னும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக I Touch Myself என்ற புகழ்பெற்ற பாடலை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் தனது மார்பகங்களை கைகளால் மறைத்தப்படி உட்கார்ந்து கொண்டு பாடலை அவர் பாடுகிறார்.

இது குறித்த அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சிக்கல் இது என்பதால் அதை செய்ய விரும்பினேன். மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் முக்கியமானது என பதிவிட்டுள்ளார்.

இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இதுவரை 15 லட்சம் பேரும், டுவிட்டரில் 1.2 லட்சம் பேரும் பார்த்துள்ளனர்.

வீடியோவை காண

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...