இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட தினேஷ் சண்டிமால்: செய்துள்ள சாதனைகள் என்ன?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் சண்டிமால் இதுவரை அடித்துள்ள ஓட்டங்களின் விபரம் தெரியவந்துள்ளது.

ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி மோசமாக செயல்பட்டதன் விளைவாக அந்த அணியின் தலைவராக இருந்த ஏஞ்சலா மேத்யூஸ் நீக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவுள்ள கிரிக்கெட் தொடரில் சண்டிமால் தலைவராக செயல்படவுள்ளார்.

சண்டிமால் இதுவரை 139 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3433 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 32.69 சராசரி வைத்துள்ள சண்டிமால் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 111 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

48 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சண்டிமால் 3642 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 44.96 சராசரியுடன் அதிகபட்சமாக 164 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 774 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 18.42 சராசரியுடன் அதிகபட்சமாக 58 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

மூன்றுவிதமான போட்டிகளிலும் சேர்த்து சண்டிமால் மொத்தமாக 15 சதங்கள் அடித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers