ஆசிய கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த கோஹ்லி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஆசிய கிண்ணம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், வங்கதேச அணி நிர்ணயித்த 223 ஓட்டங்கள் இலக்கை இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு எட்டி, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், தொடர் போட்டிகளால் ஓய்வில் இருந்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஆசிய கிண்ணத்தை வென்ற சக அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசி வரை கடுமையாக போராடிய வங்கதேச அணிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். கோஹ்லி ஓய்வில் இருந்ததால், அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்