கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ என்னை பலாத்காரம் செய்துவிட்டார்: பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தன்னை 2009-ல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் ஜேர்மனி பத்திரிக்கையில் கூறிய நிலையில் அந்த பத்திரிக்கை மீது ரொனால்டோ வழக்கு தொடரவுள்ளார்.

பிரபல ஜேர்மன் பத்திரிக்கையான Der Speigel-க்கு பேட்டியளித்த காத்திரின் மயோர்கா என்ற பெண், ரொனால்டோ கடந்த 2009 யூன் மாதம் தன்னை அமெரிக்காவின் லாஸ் வேகஸில் உள்ள ஹொட்டலில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதன்பின்னர் ரொனால்டோவும், காத்திரினும் இதுகுறித்து சமரசம் பேசி காத்தரினுக்கு $375,000 பணத்தை ரொனால்டோ கொடுத்ததாக கூறப்பட்டது.

இது குறித்து தற்போது காத்தரினின் வழக்கறிஞர் லெஸ்லி மார்க் பேசியுள்ளார், இந்த வீடியோவை Der Speigel பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அவர் கூறுகையில், ரொனால்டோ, காத்திரினுடன் போட்ட சமரச ஒப்பந்தம் முடிந்துவிட்டது, அவர் மீது மீண்டும் வழக்கு தொடர காரணம் காத்திரினுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ரொனால்டோ பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் என கூறியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரொனால்டோவின் வழக்கறிஞர் கிறிஸ்டியன் ஸ்கெர்ட்ஸ், இது குறித்த செய்தி வெளியிட்ட ஜேர்மன் பத்திரிக்க மீது ரொனால்டோ வழக்கு தொடரவுள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஏற்றுகொள்ளமுடியாத குற்றச்சாட்டு இதுவாகும்.

இதோடு ரொனால்டோவுக்கு ஏற்பட்ட தார்மீக சேதங்களுக்கான நஷ்டஈட்டையும் அவர் கோரலாம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்