செல்ல நாயால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த துயரம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டி ஆர்கி ஷார்டை அவரது செல்ல நாய் கடித்ததால், போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணி வீரர் டி ஆர்கி ஷார்ட், தற்போது உள்ளூர் தொடரில் வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில், ஷார்ட் தான் வளர்த்து வரும் ரால்ப் என்ற நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஆர்கி ஷார்ட்டின் இடது கையை ரால்ப் பலமாக கடித்துவிட்டது.

இதனால் ஷார்ட் சிகிச்சை மேற்கொண்டு தையல் போட்டுள்ளார். இதன் காரணமாக, நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்கி ஷார்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்