கேட்ச்களை பிடிக்க திணறிய இலங்கை வீரர்கள்: கத்துக்குட்டி அணியிடம் தோற்க காரணங்கள் என்ன?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஆசிய கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரை விட்டே வெளியேறியுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இலங்கையை வென்றுள்ளது முக்கிய விடயமாகும்.

இலங்கை அணியினரின் மோசமான பீல்டிங் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததை மறுக்க முடியாது.

ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது இலங்கை அணி வீரர்கள் நிறைய கேட்ச்களை கோட்டை விட்டனர். அவர்கள் தங்களது முதலாவது போட்டியின் போதும் இதே தவறை செய்து வங்கதேச அணிக்கெதிராக தோல்வியை தழுவினார்கள்.

இதோடு மூன்று முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆப்கான் அணி, இலங்கை அணியை தனது சுழல் பந்துவீச்சில் கட்டுப்படுத்தியது.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ் முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் டக் அவுட் ஆனது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்